ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளில் வசிக்கும் நரிக்குறவர் குடும்பத்தினர் பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைப்பு
செங்கனாவரம் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளில் வசிக்கும் நரிக்குறவர் சமூக குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு உராட்சி அலுவலகம், பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
செங்கனாவரம் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளில் வசிக்கும் நரிக்குறவர் சமூக குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு உராட்சி அலுவலகம், பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆற்காடு தொகுதி செங்கனாவரம் கிராமத்தில் நரிக்குறவர்கள் சமூகத்தை ேசர்ந்த சுமார் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அரசு சார்பில் 1985-ம் ஆண்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வீடுகள் பராமரிப்பின்றி உள்ளதால் அவை இன்றோ நாளையோ விழும் நிலையில் உள்ளது.
மேலும் மழை பெய்தால் வீட்டின் உள்ளே தண்ணீர் தேங்கிகிறது. சமீபத்தில் அத்தியானம் கிராமத்தில் இருளர் இன பழங்குடியினர் வீடு ஒன்று திடீரென விழுந்து விட்டது. மற்ற வீடுகளும் ஆபத்தாக உள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக அனைவரும் செங்கனாவரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியிலும் செங்கனாவரம் ஊராட்சி அலுவலகத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள 18 ஆண்கள், 20 பெண்கள், 16 குழந்தைகள் என 54 பேருக்கு மூன்று வேளையும் உணவு சமைத்து வழங்க ஒன்றிய குழு தலைவர் அசோக், ஊராட்சி மன்ற தலைவர் லதா ராஜசேகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.