தழுதாழையில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்

தழுதாழையில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாமை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.;

Update: 2023-10-08 18:58 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கால்நடைகளுக்கான சுகாதார முறைகள் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முகாமை தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு முகாமில் 177 கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்குதல், சினை ஆய்வு உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து 450 பசு மாடுகளுக்கும், 200 ஆடுகளுக்கும், 10 நாய்களுக்கும், 200 கோழிகளுக்கும் என 860 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டன. மேலும் 266 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டன. இந்த முகாமில் கால்நடைகளை சிறப்பாக பராமரித்து அதிக பால் உற்பத்தி செய்த மாட்டின் உரிமையாளர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் தழுதாழை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் குணசேகரன் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்