கால்நடை விழிப்புணர்வு முகாம்

கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-10-12 19:01 GMT

செவந்திபாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட கால்நடை துறை உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி முன்னிலை வகித்தார். கால்நடை மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல் மற்றும் சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர். மேலும் மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் குறித்த விழி்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்