மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

கடல் சீற்றத்தால் 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-23 18:45 GMT

வேதாரண்யம்:

கடல் சீற்றத்தால் 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

5-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனது.

இதனால் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சோந்்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று 5-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

சிவப்பு கொடி ஏற்றி எச்சரிக்கை

மீனவர்கள் தங்களது பைபர்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையில் இருந்து சற்று தொலைவில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். கோடியக்கரையில் மீன்பிடி சீசன் காலம் என்பதால் வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் கோடியக்கரையில் மீனவர் நலசங்கத்தின் சார்பில் சிவப்பு கொடி ஏற்றப்பட்டு மீன் பிடிக்கசெல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுபட்டுள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு

மீன்பிடிதொழில் முற்றிலும் முடங்கி போன நிலையில் கருவாடு காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு நிவாரணம் வாங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்