புயலின் நகரும் வேகம் அதிகரிப்பு: மாமல்லபுரத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் 'மாண்டஸ்' புயல்...!

Update:2022-12-09 14:54 IST
Live Updates - Page 3
2022-12-09 09:31 GMT

எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள தயார்- அமைச்சர் தா.மோ.அன்பரசன்

மாண்டஸ் புயலால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” என  மாமல்லபுரத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட பின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

2022-12-09 09:30 GMT

மாமல்லபுரத்தை நெருங்கும் ‘மாண்டஸ்’ புயல்!

மாமல்லபுரத்திற்கு 180 கி.மீ. தென்கிழக்கில் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

2022-12-09 09:27 GMT

நாளை அதிகாலை கரையை கடக்கும்...!

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாண்டஸ் புயல் இன்று இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்