மோட்டார் சைக்கிள்கள் மோதலில் சிறுமி பலி

மோட்டார்சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தாள்.

Update: 2022-06-21 16:58 GMT

குடியாத்தம்

மோட்டார்சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தாள்.

ஒடுகத்தூரை அடுத்த ஆசனாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 38),சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். குடியாத்தம் அடுத்த மொரசபல்லி கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார் திருமணத்திற்குப்பின் பிரபு, மொரசபல்லி கிராமத்தில் வசித்து வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரபு தனது மகள் மோனிஷா (11), நர்மதா (10) ஆகியோரை ஆசனாம்பட்டு கிராமத்தில் உள்ள பள்ளியில் சேர்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டு இருந்தார் குடியாத்தம் அடுத்த களர்பாளையம் அருகே வரும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பிரபு, அவரது இரண்டு மகள்கள் மோனிஷா நரமதா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

உடனடியாக கிராம மக்கள் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் மோனிஷா பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்