முளகுமூடு முதல் தக்கலை வரைகுப்பை இல்லா குமரி விழிப்புணர்வு நடைபயணம் அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்பு

முளகுமூடு முதல் தக்கலை வரை குப்பை இல்லா குமரி விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டார்.

Update: 2023-07-18 18:04 GMT

நாகர்கோவில்:

முளகுமூடு முதல் தக்கலை வரை குப்பை இல்லா குமரி விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டார்.

விழிப்புணர்வு நடைபயணம்

குமரி மேற்கு மாவட்ட தி.மு.க.வக்கீல் அணி சார்பில் குப்பை இல்லா குமரி மற்றும் பிளாஸ்டிகை ஒழிப்போம் விழிப்புணர்வு நடைபயண பேரணி முளகுமூட்டில் இருந்து தக்கலை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. பேரணிக்கு வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெபா ஜாண் தலைமை தாங்கினார். பேரணியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்து பேசினார். அத்துடன் அவர் பேரணியில் நடந்து வந்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ், அரசு வக்கீல் வீனஸ்ராஜ், காட்வின்குமார், மில்டன் லிவிங்ஸ், சவுந்தர்ராஜ் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

குளச்சல்

குளச்சல் துறைமுக வியாபாரிகள் மற்றும் ஏலக்காரர்கள் பொதுநல அமைப்பு அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதற்கு அமைப்பு தலைவர் ஆன்சல் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் நசீர் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர் ஜஸ்டஸ் வரவேற்று பேசினார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அலுவலகத்தை திறந்து வைத்தார். கூட்ட அரங்கினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி.சந்திரா, நகர செயலாளர் நாகூர்கான், நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அமைப்பு துணைத்தலைவர் மைக்கேல் தாமஸ் ரவி நன்றி கூறினார்.

குலசேகரம்

குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு அரசு ஆஸ்பத்திரி சாலையில் அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார். அதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு அங்கன்வாடி கட்டிடத்துக்கான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில், திருவட்டார் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜான்சன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், தி.மு.க. பேரூர் செயலாளர்கள் ஜெபித் ஜாஸ் (குலசேகரம்), ஜான் எபனேசர் (திற்பரப்பு), சேம் பென்னட் சதீஸ் (பொன்மனை), வட்டார காங்கிரஸ் பொருளாளர் ஜேம்ஸ்ராஜ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்