மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு; மாற்றுத் திறனாளி வக்கீலுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

மாற்றுத் திறனாளிகளை கையாள்வது தொடர்பாக அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்க தமிழக டி.ஜி.பி.க்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-29 09:48 GMT

சென்னை,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் வக்கீல் முருகானந்தம். மாற்றுத் திறனாளியான இவர் மீது பொய் புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவர் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்ட முருகானந்தம், 2020 மார்ச் 10-ந் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்கவும் முதுகானந்தம் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட முருகானந்தத்துக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் மாற்றுத் திறனாளிகளை கையாள்வது தொடர்பாக அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்க தமிழக டி.ஜி.பி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்