அரசு கலைக்கல்லூரியில் இலக்கிய மன்ற விழா

அரசு கலைக்கல்லூரியில் இலக்கிய மன்ற விழா நடந்தது.;

Update: 2023-03-13 18:51 GMT

குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் தமிழாய்வு துறை சார்பில் இலக்கிய மன்றத்தின் 5-ம் அமர்வு இலக்கியச் செல்வம் எனும் தலைப்பில் நேற்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் கடவூர் மணிமாறன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழ் இலக்கியம் படித்தால் மாணவர்களுக்கு வாழ்வில் தன்னம்பிக்கை வளரும் தைரியம் பிறக்கும். இதனால்தான் இன்று பொறியியல், மருத்துவம், வேளாண்மை போன்ற படிப்புகளில் கூட தமிழ் மொழிப் பாடத்தை அரசு வைத்துள்ளது. தாய் மொழியாம் தமிழ் மொழியில் அனைத்து துறைகளும் மொழியாக்கம் செய்யப்பட்டும் வருகிறது, என்றார். இதில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்