சாராயம் கடத்தல்; தாய்-மகன் உள்பட 4 பேர் கைது

நாகை அருகே சாராயம் கடத்தல் வழக்கில் தாய்-மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-07-25 17:44 GMT

சிக்கல்:

நாகை அருகே சாராயம் கடத்தல் வழக்கில் தாய்-மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

நாகை அருகே சிக்கல் ரெயில்வே கேட் அருகில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் சங்கமங்கலம் மேலத்தெரு ராஜேந்திரன் மகன் அஜித் (வயது 21), ஆலங்குடி ராமாபுரம் பகுதியை சேர்ந்த தவமணி மகன் உலகநாதன் (21) என்பதும் தெரிய வந்தது.

4 பேர் கைது

இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் காரைக்காலில் இருந்து பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தனபால் மனைவி சாந்தி(52), மகன் குமரேசன் (32) ஆகியோருக்கு மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித், உலகநாதன், குமரேசன், சாந்தி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்