லாரி டியூப்பில் கடத்திய சாராயம் பறிமுதல்

வடபொன்பரப்பி அருகே லாரி டியூப்பில் கடத்திய சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-30 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு:

வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் லக்கிநாயக்கன்பட்டி-பவுஞ்சிபட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர், போலீசாரை கண்டதும் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் சோதனை செய்தபோது லாரி டியூப்களில் 80 லிட்டர் சாராயத்தை அடைத்து, அதனை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், சாராயம் கடத்தியவர் குரும்பலூரை சேர்ந்த வெள்ளையன் மகன் செல்வமணி என்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்