தென்காசி மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்
தென்காசி மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் ஆகாஷ் தெரிவித்து உள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வருகிற 16-ந் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ந் தேதி குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகள், அதனுடன் இணைந்து செயல்படும் மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதி, மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்தும் அன்றைய தினங்களில் மூடப்படும். அன்று மதுபான விற்பனை ஏதும் நடைபெறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.