மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-04 18:30 GMT

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடையார்பாளையம் தாலுகா செட்டிக்குழி பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 37) என்பவர் அரியலூர் உழவர் சந்தை பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 11 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்