மதுபானம் விற்றவர் கைது

வேடசந்தூர் அருகே மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-30 19:00 GMT

வேடசந்தூர் அருகே கணேசபுரம் பகுதியில் கூம்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கணேசபுரம் பாலம் அருகே 2 பேர் மதுபானம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். போலீசார் வருவதை பார்த்த 2 பேரும் தப்பி ஓடினர். அதில், ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சிக்கியவர் கூம்பூரை சேர்ந்த முத்துசாமி என்பதும், தப்பி ஓடியவர் வாணிக்கரையை சேர்ந்த நாகப்பன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர். நாகப்பனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்