மதுபானம் விற்றவர் கைது

போடியில் மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-16 18:45 GMT

போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் மதுபானம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்குள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அதில் சர்ச் தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மதுபானம் விற்றது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து செல்வம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்