மணல்மேடு:
மணல்மேடு பகுதியில் சாராயம் விற்பதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேடு மெயின்ரோட்டை சேர்ந்த ஜெயபால் (வயது 59) என்பவர் சாராய விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவரது வீட்டில் சோதனை செய்த போது 110 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயபாலை கைது செய்தனர்.