குலசேகரன்பட்டினம்:
உடன்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த செல்லையா மகன் குமார் (வயது 45). இவர் உடன்குடியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பின்புறமுள்ள உடங்காட்டில் மது விற்றுக் கொண்டிருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று மது விற்று கொண்டிருந்த குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 41 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.