ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழக்குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒருவர் பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ்(வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 22 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ரமேைச கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.