சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-21 19:11 GMT

ஆலங்குடி மது விலக்கு போலீசார் பாத்தம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாத்தம்பட்டியை சேர்ந்த முண்டையா மகன் தங்கராஜ் (வயது 42) என்பவர் அவரது வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் 15 லிட்டர் சாராயம் வைத்து விற்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை கைது செய்து, 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் தங்கராஜை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்