சாராயம் விற்றவர் கைது
மயிலாடுதுறை அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை அய்யனார் கோவில் பகுதியில் சாராயம் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்ட அருள்மொழிதேவன் கோட்டூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.