திருவட்டார்:
ஆற்றூரில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆற்றூர் சுற்றுவட்டார பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக திருவட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ஆற்றூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆற்றூர் சந்திப்பு பகுதியில் சென்றபோது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆற்றூர் ஆர்.சி. தெருவை சேர்ந்த பென்னி (வயது 56) என்பதும், அங்கு மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.