கடையம்:
கடையம் அருகே வெய்காலிபட்டி பகுதியில் மது விற்பதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்- இன்ஸ்பெக்டர்கள் முப்புடாதி, முருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெய்காலிபட்டியை சேர்ந்த தர்மராஜ் (வயது 47) என்பவர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 115 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.