சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-10 18:45 GMT

சின்னசேலம்,

சின்னசேலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பூண்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை (வயது 39) பாண்டியன்குப்பத்தை சேர்ந்த விஜய் என்பவருடன் சேர்ந்து தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் சின்னதுரையை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்ததோடு தப்பிச்சென்ற விஜயை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்