வள்ளியூர்:
வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராபின் ஷாலு மற்றும் போலீசார் வள்ளியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வள்ளியூர் ரெயில்வே கேட் அருகே வெள்ளை சாக்குப் பையுடன் சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்தவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். உடனே போலீசார் விரட்டி சென்று அவரை பிடித்து சாக்குப் பையை சோதனையிட்டபோது அதில் 10 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் வள்ளியூர் கலையரங்கம் தெருவை சேர்ந்த இசக்கியப்பன் (வயது 47) என்பதும், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இசக்கியப்பனை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.