பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பேரளம் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நி்ன்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பேரளம் அருகே உள்ள துலார் காலனி தெருவை சேர்ந்த மாதவன்(வயது50) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.