தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 42). இவர் அந்த பகுதியில் உள்ள பஸ்நிறுத்தம் அருகே மது விற்றுக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாரிமுத்துவை மடக்கி பிடித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.