சின்னசேலம்
சின்னசேலம் அருகே நயினார்பாளையத்தை அடுத்த கருந்தலாக்குறிச்சி பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் கருந்தலாக்குறிச்சி கிராமத்தில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீ்ட்டின் அருகே சாரயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகன் மனோகரன்(வயது 49) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.