ஆற்றூரில் மது விற்றவர் கைது

ஆற்றூரில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-12 18:45 GMT

திருவட்டார்:

திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் மற்றும் போலீசார் ஆற்றூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது, அவர் வீயன்னூர் பரவக்காட்டுவிளையை சேர்ந்த மணி (வயது 58) என்றும், மது பாட்டில்களை வாங்கி, அதிக விலைக்கு விற்றதும் தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையில் 26 மது பாட்டில்கள் இருந்தன. அதைத்தொடர்ந்து மணியை போலீசார் கைது செய்து, 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்