கொல்லங்கோடு,
கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் கொல்லங்கோடு கண்ணனாகம் சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட தாளங்கன்விளையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.