மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது;

Update: 2022-09-04 20:36 GMT

நெல்லை அருகே தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தாழையூத்து பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றுக்கொண்டு இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தாழையூத்து அம்மன்கோவில் தெருவை சேர்ந்த இசக்கி (வயது 60) என்பதும், சட்டவிரோதமாக விற்பனை செய்ய மது பாட்டில்கள் வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்