நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் தலைமையிலான போலீசார் வடசேரி ஆம்னி பஸ் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திண்டுக்கல்லை சேர்ந்த சந்தோஷ்சிங்(வயது 20) என்பதும், தற்போது நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அறுகுவிளை பகுதியில் வசித்து வருவதும், பஸ்நிலையத்தில் மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.