அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்ரீபுரந்தான் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சிலம்பரசன் (வயது 26) என்பவரது வீட்டின் பின்புறம் மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.