மதுவிற்றவர் கைது

மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-28 18:40 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கோவில் சீமை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கோவில் சீமை நடுத்தெருவை சேர்ந்த ராமலிங்கம் (வயது 55) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில், வீட்டில் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்