மதுவிற்றவர் கைது

மதுவிற்றவர் கைது

Update: 2022-07-11 18:30 GMT

வலங்கைமான்:

வலங்கைமான் வட்டார பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரித்துவாரமங்கலம் போலீஸ் சரகம் அவளிவநல்லூர் பகுதி அண்ணா நகர் கிராமத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மணி மகன் முத்து(வயது42) என்பதும், அவர் மதுவிற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்து அவரிடம் இருந்து 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்