மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

Update: 2022-07-07 16:07 GMT

ராஜாக்கமங்கலம்:

வெள்ளிச்சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வெள்ளிச்சந்தை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். குருந்தன்கோடு செக்காரவிளை பகுதியில் சென்றபோது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த சுரேஷ் வினோ (வயது 51) என்பதும், அந்த பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்