அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்சியம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி தெற்கு தெருவை சேர்ந்த ராஜசேகர் (வயது 55) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுவிற்றது தெரியவந்தது. இதையடுத்து ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.