நச்சலூர்,
நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சவாரி மேடு பகுதியை சேர்ந்த மணிமாறன் மகன் கோபிநாத் (வயது 29). இவர் நங்கவரம் வாரி கரை அருகே மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.