மது விற்றவர் கைது; 70 பாட்டில்கள் பறிமுதல்

மது விற்றவர் கைது; 70 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-02-13 19:05 GMT

விராலிமலை ஒன்றியம் பேராம்பூர், ஆவூர், மாத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை சுற்றி உள்ள உணவகங்கள் மற்றும் மறைவான இடங்களில் அப்பகுதியை சேர்ந்த சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது பேராம்பூர் டாஸ்மாக் கடை அருகே உணவகம் நடத்திவரும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி (வயது 52) என்பவர் உணவகத்தில் வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்