மது விற்றவர் கைது
மணவாளக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மணவாளக்குறிச்சி:
மணவாளக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மணவாளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் தலைமையிலான போலீசார் மணவாளக்குறிச்சி ஏலா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் நெய்யூர் பறையன்விளையைச் சேர்ந்த வினு (வயது 43) என்பது தெரியவந்தது. மேலும், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் விற்பனை செய்வதற்காக 8 மது பாட்டில்கள் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வினுவை கைது செய்தனர்.