மது விற்றவர் கைது

கோத்தகிரி அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-18 20:00 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் சுற்று வட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்னதாக, அனுமதியின்றி சிலர் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் நேற்று கோடநாடு அருகே கெரடாமட்டம் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுக் கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் கொணவக்கரை பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்