மது விற்றவர் கைது

ஆனைமலை அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-09-11 19:30 GMT

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த கணபதிபாளையம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆனைமலை போலீசார் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது சிவகங்கை மாவட்டதை சேர்ந்த வீரசேகரன்(வயது 39) என்பவர் விற்பனை செய்வதற்காக 6 மது பாட்டில்களை வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததோடு அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்