வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் கந்தம்பாளையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மது விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மணி என்கிற மகாமுனி (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.