மது விற்றவர் கைது
காளசமுத்திரம் கிராமத்தில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 49) என்பவர் தனது வீட்டில் அரசு டாஸ்மாக் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் குமாரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள 60 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.