விழுப்புரம் அருகே தூசி படிந்து கிடந்த மதுபாட்டில்கள் விற்பனையால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி
விழுப்புரம் அருகே தூசி படிந்து கிடந்த மதுபாட்டில்கள் விற்பனையால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி ஆகி உள்ளனர்.
விழுப்புரம் அருகே கோலியனூர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்கள் சிலர், மதுபாட்டில்களை வாங்கியுள்ளனர். அப்போது 3 பேர் வாங்கிய மதுபாட்டில்களின் உள்ளே ஏதோ ஒன்று மிதப்பது போன்று தென்பட்டது. அந்த மதுபாட்டில்களில் நெல் முளைப்பு விட்டு வேர்போல தூசி படிந்து கிடந்ததால் மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள், கடையின் விற்பனையாளரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கெட்டுப்போன மதுபானம் குடித்து தஞ்சையில் உயிரிழந்த நிலையில் இதுபோல விற்பனை செய்வதா? எனவும் விற்பனையாளரிடம் மதுப்பிரியர்கள் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர். ஏற்கனவே கள்ளத்தனமான மதுபானங்கள் குடித்து உயிரிழப்பு, கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிகழ்ந்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் தூசி படிந்த மதுபானங்களை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.