சாராய வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சாராய வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-15 17:25 GMT

ஆற்காட்டை அடுத்த திமிரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவரை திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் சுரேஷின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அவரை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுரேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்