சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா செங்குணம் கிராமத்தை சேர்ந்த பக்கிரிகுமார் என்பவரது மகன் ஆனந்தன் (வயது 47). இவர், சாராயம் விற்றதாக போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஆனந்தன் தொடர்ந்து சட்டவிேரத செயலில் ஈடுபடுவதை தடுக்க குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.
அதைத் தொடர்ந்து ஆனந்தனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து அதற்கான ஆணையின் நகலை ஜெயிலில் இருக்கும் அவரிடம் போலீசார் வழங்கினர்.