சங்கராபுரம் அருகே தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

சங்கராபுரம் அருகே தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-12 18:45 GMT

சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் குண்டு அய்யா மகன் ராஜா (வயது 37). இவர் கரடிசித்தூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தபோது, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார், கைது செய்து அவரிடமிருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர். ராஜா மீது கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சாராயம் கடத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இவரது குற்ற செயலை கட்டுப்படுத்தும் வகையில், ராஜாவை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பரிந்துரை செய்தார். இதை ஏற்று, கலெக்டா் ஷ்ரவன்குமார் உத்தரவின்பேரில் போலீசார், ராஜாவை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்