குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

குடவாசல் அருகே குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-02 18:45 GMT

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள வடகண்டம் கிராமத்தை சேர்ந்தவர் வைரக்கண்ணு மகன் தினகரன் (வயது28). சாராய வியாபாரி. இவர் மீது பல்வேறு சாராய வழக்குகள் குடவாசல் போலீஸ் நிலையத்தில் உள்ளது. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து தினகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் தினகரனை குண்டர் சட்டத்தில் குடவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலநாதன் மற்றும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்