குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-30 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது45). சாராய வியாபாரி. இவரிடம் இருந்து நேற்று முன்தினம் மதுபாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சீர்காழி சிறையில் அடைத்தனர். இவர் மீது கொள்ளிடம், புதுப்பட்டினம் மற்றும் சீர்காழி ஆகிய போலீஸ் நிலையங்களில் 11-க்கும் மேற்பட்ட சாராய வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் நிஷா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் நாகராஜனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் லலிதா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கொள்ளிடம் போலீசார், குண்டர் சட்டத்தில் நாகராஜனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்