டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக் கடையில் துளையிட்டு 200-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-08-06 19:54 GMT


மதுரை ஒத்தக்கடை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொருசுபட்டி கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 41) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது, கடையின் பின்புற சுவரில் துளையிடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், உள்பகுதியில் பார்த்தபோது ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 200-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து மாணிக்கம் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்